கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே பால் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலத்தில் இருந்து 28 ஆயிரம் லிட்டர் பாலை ஏற்றி கொண்டு டேங்கர் லாரி ஒன்று கேரளாவுக்கு புறப்பட்டுள்ளது.
ஒசூர் அடுத்த கரடிகுட்டை பகுதி அருகே சென்றபோது, ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் டேங்கர் லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் ராஜேஷ் உள்ளிட்ட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.