கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணம் அருகே வாலீஸ்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த 14 வயது மாற்றுத்திறனாளி சிறுமி தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அவரது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து கொண்ட அதே கிராமத்தைச் சேர்ந்த ரொசாரியோ என்பவர், வீட்டிற்குள் புகுந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதுகுறித்த புகாரில் ரொசாரியோவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.