திமுக அரசு மனது வைத்தால் பழனி கோயிலுக்கு புதிய யானை வாங்க முடியும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பழனி கோயிலில் தைப்பூசத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனையொட்டி பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் உறவினர்களுடன் பழனிக்கு பாதயாத்திரையாக வருகை தந்தார்.
இதனைதொடர்ந்து சுவாமி தரிசனம் செய்த அவர், தங்க ரதம் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய வனவிலங்குகள் சட்டத்தின் படி பழனி கோயிலுக்கு புதிய யானை வாங்குவதற்கு தமிழக அரசு, மத்திய அரசுடன் பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.
திமுக அரசு மனது வைத்தால் பழனி கோயிலுக்கு புதிய யானை வாங்க முடியும் எனவும், அதற்கு பாஜகவும் உதவ தயார் எனவும் தெரிவித்துள்ளார்.