தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் 151 காவடிகள் எடுத்து பாதயாத்திரையாக சென்றனர்.
உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் வரும் 11-ம் தேதி தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர். அந்த வகையில், 400 ஆண்டுகள் பழமையான வைரவேலுடன் ஜெயங்கொண்டான் ரத்தினவேல் நாட்டார்கள் 151 காவடிகள் எடுத்து பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 3-ம் தேதி ஜெயங்கொண்டத்தில் இருந்து புறப்பட்டு அவர்கள், திண்டுக்கல் சாணார்பட்டி வந்தடைந்து காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். தைப்பூச தினத்தன்று முருகன் கோயிலில் காவடி செலுத்திய பின்னர் அவர்கள் மீண்டும் பாதயாத்திரையாகவே ஊர் திரும்ப உள்ளனர்.
















