பிரதமர் மோடியின் வளர்ச்சி அரசியலை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளதை டெல்லி தேர்தல் வெற்றி உணர்த்துவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவத்துள்ளார்.
ஊழல் நிறைந்த ஆம் ஆத்மி கட்சியை டெல்லி மக்கள் நிராகரித்து, காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து மூன்றாவது முறையாக அழித்து, சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளதாக கூறியுள்ளார்.
இன்றைய முடிவுகள், இந்திய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் பரப்பும் பிளவுபடுத்தும் அரசியலை விட, பிரதமர் மோடியின் வளர்ச்சி அரசியலை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை பிரதிபலிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த அற்புதமான வெற்றிக்காக உழைத்த டெல்லி பாஜக தலைவர்களுக்கும் காரியகர்த்தாக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்வதாக அண்ணாமலை கூறியுள்ளார்.