ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி போலியான வெற்றி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. பள்ளியில் சிறுமிகளுக்கு ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை நடப்பது தொடர்கதையாக உள்ளதாக தெரிவித்தார்.
தமிழக காவல்துறை உயர் பதவியில் உள்ள ஏடிஜிபியே தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறிய செய்தி மிகுந்த அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் என்பதை எண்ணி மக்கள் அச்சப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இண்டி கூட்டணிக்கு மக்கள் சமட்டி அடி கொடுத்துள்ளனர். இந்த தேர்தல் மூலம் இந்தியா கூட்டணி உள்ளதா இல்லையா என்ற சந்தேகம் வருகிறது.
மிக மோசமான நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது. இங்கு உள்ளவர்கள் தான் இந்தியா கூட்டணியை தூக்கி பிடித்துக் கொண்டிருப்பதாகவும் இபிஎஸ் தெரிவித்தார்.
ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி போலி வெற்றி. அதிமுக வினர் ஓட்டு கள்ள ஓட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இபிஎஸ் கூறினார்.