மதுரையில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் 30 -வது மாநில மாநாடு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ஏ.பி.வி.பி-யின் மாநில மாநாடு பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் கடந்த 7 -ம் தேதி துவங்கி, 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், மதுரை பழங்காநத்தம் ரவுண்டான பகுதியில் தமிழகத்தின் 30-வது மாநில மாநாடு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில், தேசிய செயலாளர் ஸ்வரன் பி.ராஜ், மாநிலச் செயலாளர் சூர்யா, மாநில இணைச் செயலாளர்கள் விஜயராகவன் மற்றும் சந்தோஷ்குமார், மாணவிகள் ஒருங்கிணைப்பாளர் செல்வி. பாரதி, மாநகர் செயலர் ஸ்ரீ ராம் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.
கூட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகள், பொது மக்களுக்கு எதிராக திமுக அரசு செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினர்.