புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன், முதலமைச்சர் ரங்கசாமியை மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்து பேசினார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் எல்.முருகன் புதுச்சேரியில் சென்றுள்ளார். இந்நிலையில், துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அமைச்சர் எல்.முருகன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இதேபோல் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியையும் எல்.முருகன் சந்தித்தார்.
இதேபோல் பத்மஶ்ரீ விருதுக்கு, சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட புகழ்பெற்ற ‘தவில்’ இசைக் கலைஞர் தட்சணாமூர்த்தியையும் எல்.முருகன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.