சென்னை தாம்பரம் அருகே 9 பெண்களை ஏமாற்றிய சட்டக் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
செம்பாக்கத்தை சேர்ந்த லூயிஸ் தமிழ்ச்செல்வன், தனியார் சட்டக்கல்லூரியில் பயின்று வந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், லூயிஸ் தமிழ்ச்செல்வனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்த காதலி, அவருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். காதலித்தபோது பெண்ணிடம் நகை மற்றும் சுமார் 20 லட்சம் பணத்தை பெற்று தமிழ்ச்செல்வன் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
மேலும், தனிமையில் இருக்கும் புகைப்படங்களில் வெளியிடுவேன் எனக்கூறி மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
அப்போது லூயிஸ் தமிழ்ச்செல்வனால் ஏமாற்றப்பட்ட மற்றொரு பெண்ணும் புகார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழ்ச்செல்வனின் செல்போனில் மேலும் 9 பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததாகவும் அதனை போலீசார் கைபற்றி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.