மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அமைப்புகளை கண்டுகொள்ளாமல் தூங்கும் திமுக அரசு எப்போது விழிக்கும்? என தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகளை அறுத்து அசைவ விருந்து வைப்பதாக போஸ்டர் ஒட்டப்பட்டதற்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
மதநல்லிணக்கம் என்பது இந்துக்களுக்கு மட்டும் தானா? என கேள்வி எழுப்பியுள்ள தமிழக பாஜக, போஸ்டர் ஒட்டிய முஸ்லீம் ஐக்கிய ஜமாத்திற்கு கண்டனம் தெரிவிக்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திராணி உள்ளதா? என்றும், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அமைப்புகளை கண்டுகொள்ளாமல் தூங்கும் திமுக அரசு எப்போது விழிக்கும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.