தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக் கூறி சேலத்தில் அரசு ஊழியர்கள் இரவு நேரத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 50-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களும் பங்கேற்ற நிலையில். இரவிலும் போராட்டம் தொடர்ந்தது. தமிழ்நாடு அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக அப்போது அவர்கள் முழக்கம் எழுப்பினர்.