தமிழக வெற்றிக் கழகத்தில் குழந்தைகள் அணி அமைக்க உள்ளதாக அக்கட்சியின் சட்ட விதிகளில் இடம்பெற்றிருக்கும் தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளின் அதிகாரங்கள் மற்றும் அவர்களின் பணிகள் அடங்கிய விவரங்கள் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன.
இதில் தவெகவின் கொள்கைகள் மற்றும் இலக்குகளை கொண்டு 28 சார்பு அணிகள் அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதில் பிற கட்சிகளை போல் இளைஞரணி, மகளிர் அணி, மாணவரணி உள்ளிட்ட பல்வேறு அணிகள் இடம்பெற்றுள்ள நிலையில், இதுவரை எந்த கட்சியிலும் இல்லாத வகையில் குழந்தைகள் அணியை உருவாக்க தவெக திட்டமிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.