பழனி பாலதண்டாயுதபாணி கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்நிலையில் சிகர நிகழ்வான தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து அரோகரா கோஷமிட்டு பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் நாமக்கல் அருகே காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் தைப்பூசத்தையொட்டி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.