சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசுப் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
ஆத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து வானவரம் மலை கிராமத்திற்கு அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.
கள்ளுக்கட்டு என்ற இடத்தில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.