சென்னை சிங்காரவேலன் நகரில் மேயர் பிரியா கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டார்.
முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் வரும் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அக்கட்சியினர் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் போட்டிக்காக மேயர் பிரியா கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டார்.