இங்கிலாந்துக்கு எதிரான 3வது போட்டியில் 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 3க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை முழுவதுமாக கைப்பற்றியது.
இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில், சுப்மன் கில் அபாரமாக விளையாடி சதம் விளாசினார்.
மற்றொரு புறம் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் விராட் கோலி அரை சதம் அடித்த நிலையில், இந்திய அணி 50 ஓவர்களில் 356 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தொடக்கம் முதலே தடுமாறிய நிலையில் 214 ரன்களுக்கு அந்த அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதனால் 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 3க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இங்கிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது.