கோவை குண்டு வெடிப்பு தீவிரவாதிகளை தண்டிக்காமல் அவர்களை திமுக அரசு கதாநாயகர்கள் போல் சித்தரிப்பதாக பாஜக தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கு 27ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஆர்.எஸ்.புரத்தில் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் பயங்கரவாதம் அதிகரிக்க திமுக அரசே காரணம் என்றும், ஓட்டு வாங்குவதற்கு மட்டுமே திமுக ஆட்சி செய்வதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் கோவை குண்டு வெடிப்பு தீவிரவாதிகளை தண்டிக்காமல் திமுக அரசு கதாநாயகர்கள் போல் சித்தரிப்பதாகவும் விமர்சித்தார்.