பழனி தைப்பூச திருவிழா தெப்ப உற்சவத்துடன் நிறைவு பெற்றது.
அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி முருகன் கோயிலில் கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா தொடங்கியது. தைப்பூசத் திருவிழாவின் ஏழாம் நாளன்று முக்கிய நிகழ்வான தேரோட்டத்தின் போது ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.
இந்த நிலையில், தைப்பூசத் திருவிழாவின் நிறைவு நாளை ஒட்டி தெப்பத்தேர் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானை சமேதராக தெப்பத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.