அமெரிக்க சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பிரதமர் மோடிக்கு சர்வதேச ஊடகங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன.
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்தார்.
அப்போது வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளை பிரதமர் மோடி நடத்தினார்.
இந்நிலையில், அமெரிக்க சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பிரதமர் மோடிக்கு சர்வதேச ஊடகங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன.
மேலும், அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தங்கள், ராணுவ ஒப்பந்தங்களை பிரதமர் மோடி சிறப்பாக முன்னெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளது.
குறிப்பாக, இந்தியாவிற்கு F-35 போர் விமானங்களை அமெரிக்கா வழங்க முன்வந்திருப்பது சிறப்பான முன்னேற்றம் என்றும், வர்த்தகத்தில் சாதகமற்ற சூழல் நிலவிய போதும், பிரதமர் மோடி தனது இலக்குகளை நோக்கி முன்னேறி உள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இந்தியா-அமெரிக்கா இடையிலான பொருளாதார, ராணுவ உறவுகள், புதிய உயரத்திற்கு சென்றிருப்பதாகவும், இறக்குமதி பொருட்களுக்கான வரிவிதிப்பை டிரம்ப் கடுமையாக்கிய நிலையிலும், இந்தியா-அமெரிக்கா இடையிலான பொருளாதார, ராணுவ உறவுகள் புதிய உயரத்திற்கு சென்றிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன.