கேரள மாநிலம் கோழிக்கோட்டையில் உள்ள பிரபல நகைக்கடையை கும்பமேளா பிரபலம் மோனாலிசா திறந்துவைத்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளா மூலம் ஒரே நாளில் பிரபலமடைந்தவர் மோனாலிசா. இவர் கேரள மாநில கோழிக்கோட்டில் உள்ள நகைக்கடை ஒன்றின் திறப்பு விழாவில் கலந்துகொண்டார்.
அவரை காண திரளான மக்கள் அங்கு கூடினர். அப்போது, மோனாலிசாவுக்கு விலை உயர்ந்த வைர நெக்லஸ் பரிசாக வழங்கப்பட்டது.