கெஜ்ரிவாலின் கண்ணாடி மாளிகை குறித்த விசாரணைக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கேஜ்ரிவால் 2015 முதல் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் வாரம் வரை வசித்து வந்த அரசு பங்களாவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.
அது கண்ணாடி மாளிகை போல மாற்றப்படுவதற்காக நிலங்கள் சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்டதோடு, உள்புற அலங்காரத்துக்காக மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் செலவிடப்பட்டதாகவும் பாஜக குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பாஜக தலைவர் விஜேந்தர் குப்தா, தனது புகாரின் பேரில் கெஜ்ரிவாலின் கண்ணாடி மாளிகை குறித்த விசாரணைக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.