மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை என ஸ்டாலின் பொய் கூறுவதாக பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி குற்றச்சாட்டினார்.
கடலூர் மாவட்டம் பென்னாடம் பகுதியில் செய்தியாளர்ளை சந்தித்த அவர்,தமிழக அரசு கேட்கும் அனைத்தையும் மத்திய அரசு வழங்கி வருவதாக தெரிவித்தார்.
சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக முதல்வர் ஸ்டாலின் கூடுதல் நிதி கேட்டதை சுட்டிக்காட்டிய அவர், ரூ.43,0000 கோடி நிதியை ஒரே தவணையாக அளித்தவர் பிரதமர் மோடி அளித்ததாகவும் கூறினார் . தமிழகத்திற்கு அதிக மருத்துவக்கல்லூரிகள் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.