வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், பெருனாழி அருகே குமாரபுரம் கிராமத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 266வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட மாட்டுவண்டி பந்தய வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
6 மற்றும் 8 கிலோ மீட்டர் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் பங்கேற்ற காளைகள் வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டுவண்டி பந்தய வீரர்களுக்கு ரொக்க பணம் மற்றும்நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாட்டுவண்டி பந்தயத்தை சாலையின் இருபுறங்களிலும் நின்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.