கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 49 ஆட்டுக்குட்டிகள் தீயில் கருகி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாகையூர் கிராமத்தில் செல்வகுமார் என்பவரது நிலத்தில் பட்டி அமைத்து, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பவர் 400 க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இவர், வழக்கம்போல், பட்டியில் ஆட்டுக்குட்டிகளை அடைத்து வைத்துவிட்டு, மற்ற ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில், ஆடுகளுடன் வீடு திரும்பிய குமார், பட்டியில் அடைக்கப்பட்ட 49 ஆட்டு குட்டிகள் தீயில் எரிந்து உயிரிழந்த கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து புகார் அளித்ததின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆட்டுக்குட்டிகள் தீ வைத்து கொல்லப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.