தமிழை வைத்து திமுகவினர் பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
மும்மொழி கொள்கை தொடர்பாக விளக்கமளித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,
தனியார் பள்ளிகளில் படிக்கும் திமுகவினரின் குழந்தைகள் மட்டும் மூன்று மொழிகள் கற்கலாம். அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் படிக்க வாய்ப்பு மறுப்பதா? அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள்? உங்களுக்கொரு நியாயம், எளிய மக்களுக்கு ஒரு நியாயமா? என அண்ணாமலை எழுப்பியுள்ளார்.
மூன்றாவது மொழியாக மாணவர்கள் தங்களுக்கு பிடித்த மொழியை படிக்கலாம் என்றும் தமிழை வைத்து திமுகவினர் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றனர் என்று அண்ணாமலை விமர்சித்தார்.
திமுகவினரின் குழந்தைகள் மட்டும் 3 மொழிகள் கற்கலாமா? என கேள்வி எழுப்பிய அவர் பொய்யை சொல்லி பிழைப்பு நடத்த முதலமைச்சர் வெட்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தி கட்டாயமாக இருந்தது என்றும் 3வது மொழி இந்தியாக தான் இருக்க வேண்டும் என கட்டாயமல்ல என தெரிவித்தார்.
“மும்மொழிக் கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்றுக் கொண்டால் நாங்களும் ஏற்கிறோம் என அண்ணா கூறியுள்ளார்” என அண்ணாமலை தெரிவித்தார்.