ஐஎஸ் மற்றும் அல்-கொய்தா பயங்கரவாதிகள் இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதி செய்வதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் மிகப்பெரிய அளவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்த இயலாத சூழலில், தங்களது அனுதாபிகளை பகடைக்காயாக பயன்படுத்தி சதி திட்டத்தை அரங்கேற்ற அவர்கள் திட்டமிட்டிருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் செயல்படும் 24-க்கும் மேற்பட்ட பயங்கரவாத அமைப்புகளால் மத்திய ஆசிய பிராந்தியம் மட்டுமின்றி, அண்டை நாடுகளுக்கும் அச்சுறுத்தல் நிலவுவதாக எச்சரிக்கை விடுத்துள்ள ஐ.நா., இதை எதிர்கொள்ள உறுப்பு நாடுகள் தயாராக இருக்க வேண்டுமென ஆலோசனை தெரிவித்துள்ளது.
அந்த வகையில், ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு பரவும் அடுத்தகட்ட பயங்கரவாத அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த ஐ.நா. உறுப்பு நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென அதன் தலைவர் ஆன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.