அதிமுகவில் விரைவில் பொதுச்செயலாளர் என்ற பதவியே இருக்காது என்றும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒரு தொண்டர் வருவார் எனவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் நடைபெற்ற அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார்.
அப்போது, புதிய வரலாற்றை உருவாக்கிய எம்ஜிஆரை திமுகவிலிருந்து தூக்கி எறிந்தார்கள் என்றும், எம்ஜிஆரின் எண்ணத்தின் அடிப்படையில்தான் அதிமுக உருவானது என்றும் தெரிவித்தார்.
அதிமுகவின் கொள்கைகளை, சட்ட விதிகளை உருவாக்கியவர் எம்ஜிஆர் என்றும் கூறினார்.
2021 தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின்போது 75 தொகுதிதான் அதிமுக பெறும் என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியதாகவும், அதனை ஏற்க மறுத்த எடப்பாடி, தனக்கு நல்ல செல்வாக்கு உள்ளதாக தெரிவித்ததாக ஓபிஎஸ் கூறினார். அமித்ஷாவின் பேச்சை கேட்காததால் ஆட்சியை இழந்து கஷ்டப்படுகிறோம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.