உக்ரைனில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பேசியதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவியில், ரஷ்யா தனது ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும், உக்ரைன் மக்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களை ரஷ்யா வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இல்லையெனில், இருநாடுகளுக்கு இடையேயான போர்நிறுத்தம் மின்ஸ்க் ஒப்பந்தங்களைப் போலவே நீர்த்துப்போகும் என கூறியுள்ளார்.