சென்னை வடபழனியில் நடைபெற்ற பிரம்மஸ்தான மஹோத்சவம் எனும் ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்ற மாதா அமிர்தானந்தமயி, அம்ரித் 2025 எனும் புத்தகத்தை வெளியிட்டார்.
சென்னை வடபழனியில் உள்ள அவிச்சி பள்ளியில் பிரம்மஸ்தான மஹோத்சவம் எனும் ஆன்மிக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாதா அமிர்தானந்தமயி தனது ஆயிரக்கணக்கான துறவிச் சீடர்கள், பிரம்மச்சாரிகள் மற்றும் ஆசிரமவாசிகளுடன் பங்கேற்றார். அப்போது அவர் தனது பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
பின்னர் அம்ரித் 2025 எனும் ஆன்மிக புத்தகத்தை மாதா அமிர்தானந்தமயி வெளியிட்டார். இதனை துக்ளக் இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் மது ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
ஆன்மிக நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மாதா அமிர்தானந்தமயின் ஆசியை பெற்றனர்.