சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த பிங்க் ஆட்டோ திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில், இந்த திட்டம் அடுத்த மாத இறுதிக்குள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் ஆட்டோவில் ஜிபிஎஸ் உள்ளிட்ட கண்காணிப்பு வசதிகள் இடம்பெற வேண்டும் என அறிவித்துள்ள தமிழக அரசு, ஆட்டோ முழுவதும் பிங்க் நிறத்தில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் இதற்கான மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.