தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தோல்வி அடைந்து விட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை கமலாலயத்தில்
இது தொடர்பாக சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு அவரளித்த பேட்டியில்,
தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் மார்ச் 1-ம் தேதியில் இருந்து 90 நாட்களுக்கு மும்மொழிக் கொள்கை குறித்து கருத்து கேட்டு கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்றும் மும்மொழி தொடர்பாக கணக்கு எடுத்து குடியரசு தலைவருக்கு அறிக்கை கொடுக்க உள்ளோம் என அண்ணாமலை தெரிவித்தார்.
தாய்மொழிக்கு முன்னுரிமை வழங்குவதே புதிய கல்விக் கொள்கையின் சிறப்பு என்றும் தமிழகத்தில் இந்தி எங்கேயும் திணிக்கப்படவில்லை; திணிக்கவும் மாட்டோம் என அண்ணாமலை விளக்கம் அளித்தார்.
3-வது மொழியாக ஏதாவது ஒரு இந்திய மொழியை படிக்க வேண்டும் என்றுதான் சொல்கிறோம், மும்மொழி கொள்கை என்றால் இந்தி திணிப்பு கிடையாது என தெரிவித்தார்.
புதிய கல்விக் கொள்கை குறித்து திமுகவினர் தவறான பிரச்சாரத்தை செய்வதாக அண்ணாமலை குற்றச்சாட்டினார்.
விஜய் வித்யாஸ்ரம் என்ற பெயரில் தவெக தலைவர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார் என்றும் எஸ்.ஏ.சந்திரசேகரின் அறக்கட்டளை பெயரில் விஜய்யின் பள்ளி நடத்தப்படுவதாக அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் 30 லட்சம் பேர் மும்மொழி கல்வியை படிக்கின்றனர் என்றும் நான் கூறுவதற்கு ஆதாரம் இல்லை என்று அரசு கூறுவது வெட்கக்கேடானது என்று அண்ணாமலை தெரிவித்தார்.
“அரசு பள்ளியை விட தனியார் பள்ளி மாணவர்கள் அதிகம் இருப்பதால் இரு மொழிக்கொள்கை தோற்றுவிட்டது என தெரிவித்தார்.
அமைச்சர் அன்பில் மகேஸின் மகன் தனியார் பள்ளியில் பிரெஞ்சு மொழி படிக்கிறார் என்றும் அன்பில் மகேஸ் குழந்தைக்கு ஒரு நியாயம், அரசு பள்ளி குழந்தைகளுக்கு ஒரு நியாயமா? என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
தனியார் பள்ளிகளுக்காக அரசு பள்ளிகளை அழிக்கிறார்கள் என்றும் மாணவர்கள் தனியார் பள்ளியை நோக்கி செல்ல வேண்டும் என்பதற்காக இரு மொழிக்கொள்கை என அண்ணாமலை தெரிவித்தார்.
விகடன் இணையதளத்தை முடக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் பிரதமர் கையில் விலங்கு போட்டு டிரம்ப் அருகில் அமர்வது போல சித்தரிப்பது கருத்து சுதந்திரமா? என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
“முதல்வருக்கு விலங்கு போட்டு, பக்கத்தில் மதுக்கடை ஒன்றை வைத்து கார்ட்டூன் போட்டால் முதல்வர் விட்டு விடுவாரா?” என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் யார் அந்த சார் என்ற விவகாரத்தில் 100% மா.சுப்பிரமணியன் உண்மையாக நடந்து கொள்ளவில்லை என அண்ணாமலை குற்றச்சாட்டினார். SIT விசாரணை முடியும்போது 100% ஆதாரங்களுடன் யார் அந்த சார் என்பதை வெளியிடுவேன் என அண்ணாமலை தெரிவித்தார்.