சென்னையில் மாதா அமிர்தானந்தமயி அம்மாவை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவரிடம் ஆசி பெற்றார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மாதா அமிர்தானந்தமயி அம்மாவை சந்தித்தது ஆழமான தெய்வீக அனுபவத்தை அளித்ததாக தெரிவித்துள்ளார். அவருடனான சந்திப்பு ஆன்மாவை வளப்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.