வீரம், துணிச்சல் மற்றும் வலிமையின் முன்மாதிரியான சத்ரபதி சிவாஜி மகாராஜை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், மராட்டியப் பேரரசின் நிறுவனர் என்ற முறையில், சிவாஜி தனது போர் உத்திகள், வீரம் மற்றும் நிர்வாகத் திறன்களுக்குப் பெயர் பெற்றவர் என கூறியுள்ளார்.
அவரது தலைமை ஏழைகள் மற்றும் அனைத்து சாதிகள், மதம் மற்றும் வர்க்க மக்களின் நலனுக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டது, அவரை ஒரு சக்தியாக மாற்றியது என்றும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.