மயிலாடுதுறை அருகே 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில், உளவுப்பிரிவு காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் கடந்த 14ஆம் தேதி ஹரிசக்தி, ஹரீஷ் என்ற 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தங்கதுரை, மூவேந்தன், ராஜ்குமார் முனுசாமி, அவரது மனைவி மஞ்சுளா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் 5 பேரையும் வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க உதவியதாக சஞ்சய் என்பவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். மேலும், பெரம்பூர் காவல்நிலையத்தில் உளவுப்பிரிவு காவலராக பணியில் இருந்த பிரபாகரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.