புதுச்சேரியில் மதுபோதையில் இருந்த நபர் ரூபாய் நோட்டுகளை கையில் வைத்துக்கொண்டு ரகளையில் ஈடுபடும் வீடியோ வெளியாகியுள்ளது.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த அண்ணா சாலையில் மதுபோதையில் சுற்றித்திரிந்த நபர், அங்கிருந்த பொதுமக்களை கேலி செய்யும் விதமாக நடந்துகொண்டார். தொடர்ந்து தன்னிடம் இருந்து ரூபாய் நோட்டுகளை வாகன ஓட்டிகளிடம் காண்பித்து அவர் ரகளையில் ஈடுபட்டார்.
தொடர்ந்து மீண்டும் அவர் மதுபானக் கடைக்கு சென்ற நிலையில், இந்த வீடியோ வைரலாகி வருகிறது.