தாம்பரத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டிருந்த ஊராட்சி மன்ற தலைவரின் வீட்டின் முகப்பு இடித்து அகற்றப்பட்டது.
அகரம்தென் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தரிசு நிலத்தை ஆக்கிரமித்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரன் வீடு கட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பு இடத்தை மீட்க உத்தரவிட்டது.
இதனையடுத்து, ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஊராட்சி மன்ற தலைவரின் வீட்டின் முகப்பு இடித்து அகற்றப்பட்டது. வீட்டில் உள்ள பொருட்களை எடுக்க அவகாசம் கோரப்பட்டதால், ஆக்கிரமிப்பை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.