கடலூர் மாவட்டம் சிறுப்பாக்கம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இப்பகுதியில் 500 ஏக்கருக்கு மேல் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், விளைந்த நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வெளியூர்களுக்குச் சென்று அரிசியை விற்பனை செய்யும் நிலை உருவாகியுள்ளதால், நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேளாண்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.