தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை அப்பதவியில் இருந்து மாற்றக்கோரி அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கு செல்வப்பெருந்தகை மதிப்பு அளிப்பதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் கட்சிக்காக உழைத்த மாவட்ட தலைவர்களை மாற்ற செல்வப்பெருந்தகை முயல்வதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் செல்வப்பெருந்தகையை தலைவர் பதவியில் இருந்து மாற்றக்கோரி காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களின் தலைவர்கள் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முகாமிட்டுள்ள நிலையில் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபாலை சந்தித்து புகார் மனுவை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.