தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைப்பது சரியாக வராது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நாம் தமிழர் கட்சியின் விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது,
இதில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பெரிய கட்சிகள் கூட்டணிக்கு அழைத்த போதே செல்லவில்லை என்றும், பொழுதுபோக்கு தளத்தில் தலைவரை தேடுபவர்கள் தம்மை தேட மாட்டார்கள் என கூறினார்.
“நோட்டுக்காகவும், சீட்டுக்காகவும் வந்தவன் தான் இல்லை என்றும், இந்த நாட்டுக்காக வந்தவன் என்றும் அவர் கூறினார்.
வருண் ஐ.பி.எஸ் கட்சிக்காரன் போல பேசுகிறார் என்றும், தேவையில்லாமல் சீண்டினால் வெறி வரும் என்றும் சீமான் தெரிவித்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தனார்.