மகனை படிக்க வைத்தது போல் தேசிய கல்விக் கொள்கைக்கு விஜய் ஆதரவு அளிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
நடிகரும் தவெக தலைவருமான விஜய் அவருடைய மகன் ஜேஸன் சஞ்சய் அவர்களை சென்னை அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளியில் சேர்த்து பன்மொழி படிக்க வைத்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் படூரில் நடத்தி வரும் அவருக்கு சொந்தமான விஜய் வித்யாஸ்ரம் CBSE பள்ளியில் ஆயிரக்கணக்கான ரூபாய் கல்விக் கட்டணம் பெற்றுக்கொண்டு அங்கு பயின்று வரும் மாணவர்களுக்கு மும்மொழி கற்பித்து வருவதையும் அவர் கோடிட்டு காட்டியுள்ளார்.
அதே போல் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் அனைத்தையும் மெட்ரிக்குலேஷன் மற்றும் CBSE பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தி மும்மொழி கல்வி போதிக்க வழிவகை செய்யும் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தவெக தலைவர் விஜய் ஆதரவளிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.