சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டத்தில் இந்தியா – வங்கதேச அணிகள் இன்று மோதுகின்றன.
கராச்சியில் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இதனிடையே இன்றைய ஆட்டத்தில் இந்தியா-வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா – வங்கதேச அணிகள் இதுவரை 41 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதிய நிலையில், அதில் 32 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.