தமிழகத்தில் ஆட்சி புரியம் திமுக அரசு விரைவில் மக்கள் தீர்ப்பு மூலம் அகற்றப்படும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ஒரு குடும்பத்தின் ஆதிக்கம், கறைபடிந்த அமைச்சரவை, ஊழலின் மையம், சட்டவிரோதத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது, தமிழகத்தை போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்தின் புகலிடமாக மாற்றுவது, பெருகிவரும் கடன் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டியுள்ளார்.
பாழடைந்த கல்வி அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தான சூழல், சாதி மற்றும் மத அடிப்படையிலான பிரிவினைவாத அரசியல், நல்லாட்சியை வழங்குவதில் இடைவிடாத தோல்விகள், குறைபாடுள்ள கொள்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என அனைத்திற்கும் காரணமாக திமுக தலைமையிலான அரசு விரைவில் மக்களால் பதவியில் இருந்து நீக்கப்பபடும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, Get out Stalin என்ற ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டி பொதுமக்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.