டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி முதலமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங், தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், பீகார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா, ராஜஸ்தான் துணை முதல்வர் பிரேம் சந்த் பைர்வா, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்பட என்டிஏ கூட்டணி முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்துவது உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.