ஆசியாவின் மிக ஆழமான கிணற்றை வெறும் 580 நாள்களில் தோண்டி சீன அரசின் தேசிய பெட்ரோலியக் கழகம் சாதனை படைத்துள்ளது.
சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் பகுதியில் உள்ள தக்லிமகன் பாலைவனத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த கிணறு, பூமியின் பரிணாமம் மற்றும் புவியியல் சார்ந்த ஆராய்ச்சிக்காக தோண்டப்பட்டுள்ளது.
மொத்தம் 10,910 மீட்டர் நீளமுள்ள இந்த கிணற்றின் கடைசி 910 மீட்டரை தோண்டுவதற்கு கிட்டத்தட்ட 300 நாள்கள் வரை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 12 ஆயிரம் அடி வரை துளையிடும் கருவியை பயன்படுத்தியதாக சீனா தெரிவித்துள்ளது.