அமெரிக்காவில் எப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் நியமனம் செய்யப்பட்டதற்கு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை எப்.பி.ஐ இயக்குநராக நியமித்து, டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். அவரது நியமனத்திற்கு ஜனநாயகக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், எப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை உறுதிசெய்தது. 51க்கு 49 என்ற வாக்குகளின் அடிப்படையில் அவரின் நியமனம் அங்கீகரிக்கப்பட்டது.