வரி விதிப்பு அச்சுறுத்தலுக்குப் பிறகு பிரிக்ஸ் அமைப்பு உடைந்து நொறுங்கி விட்டது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள அவர்,
பிரிக்ஸ் அமைப்பினர் அமெரிக்க டாலரை அழித்து ஒரு புதிய கரன்சியை உருவாக்க விரும்பினர் என தெரிவித்தார். ஆனால், தான் அதிபராக பதவியேற்ற பிறகு டாலரை அழிக்க முயற்சி செய்யும் நாடுகளுக்கு 150 சதவீதம் வரி விதிப்பேன் என எச்சரிக்கை விடுத்தேன் என டிரம்ப் கூறியுள்ளார்.
இதனால் தற்போது பிரிக்ஸ் அமைப்பு உடைந்து நொறுங்கி விட்டது எனவும், வரி விதிப்பு அச்சுறுத்தலுக்குப் பிறகு பிரிக்ஸ் அமைப்பு பற்றி எந்த தகவலும் வரவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.