மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிட வேண்டுமென, பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
சத்ரபதி சிவாஜியின் முடிசூட்டு விழாவின் 350-வது ஆண்டு விழா, ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா மற்றும் 98-வது அகில இந்திய மராத்தி சாஹித்திய சம்மேளத்தின் தொடக்க விழா டெல்லியில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய மொழிகளிடையே எந்த விரோதமும் இல்லை என்றும், ஒவ்வொரு மொழியும் மற்றொரு மொழியை வளப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
மேலும், மொழிகளுக்கு இடையே பிரிவினைகளை ஏற்படுத்துவதை தவிர்த்துவிட்டு, மொழிகளை வளப்படுத்துவது நமது சமூக பொறுப்பு என அவர் அறிவுறுத்தினார். மேலும், மொழிகளுக்கு இடையே பாகுபாடு காட்டுபவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.