டெல்லியில் நடைபெற்ற அகில பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளன தொடக்க விழாவில் பிரதமர் மோடியின் செயல் காண்போரை நெகிழச் செய்தது.
சத்ரபதி சிவாஜியின் முடிசூட்டு விழாவின் 350-வது ஆண்டு விழா, ஆர்எஸ்எஸ்ஸின் நூற்றாண்டு விழா மற்றும் 98-வது அகில இந்திய மராத்தி சாஹித்திய சம்மேளத்தின் தொடக்க விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
அப்போது, தேசியவாத காங்கிரஸை தோற்றுவித்த சரத்பவார் இருக்கையில் அமர்வதற்காக வந்தார். அவருக்கு உதவிய பிரதமர் மோடி, கண்ணாடி டம்ளரில் தண்ணீர் ஊற்றி கொடுத்து உபசரித்தார். பிரதமரின் இந்த உதவும் மனப்பான்மையை கண்டு அங்கிருந்தவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.