காசி-தமிழ் சங்கமம்’தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதாக‘ பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசியில், பாபா விஸ்வநாத் நகரில் நடைபெறும் ‘காசி தமிழ் சங்கமம் 3.0’ நிகழ்வில் அவர் உரையாற்றினார்.
அப்போது, இந்தியாவின் கலாச்சாரம், பல்வேறு பகுதிகளில் பரவியிருந்தாலும், ஒரே இடத்தில் ஒற்றுமையைக் காண்பதாக தெரிவித்தார்
”காசி-தமிழ் சங்கமம்” என்பது பிரதமர் .நரேந்திர மோடிஜியின் ஒரு இந்தியா, சிறந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையின் சக்திவாய்ந்த அடையாளம் என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்வு நமது வளமான கலாச்சார பாரம்பரியத்தை ஒரே மேடையில் அனைவரும் இணைந்து பரிமாறிக்கொள்வதற்கான ஒரு கொண்டாட்ட நிகழ்வு என்றும் அவர் தெரிவித்தார்.
ஆயிரம் ஆண்டுகள் நமது பாரம்பரியத்தை வலுப்படுத்தி, நம் நாட்டை ஒற்றுமையின் பிணைப்பில் இணைக்கும் உணர்வில், ‘காசி-தமிழ் சங்கமம்’ தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் அர்த்தமுள்ள செய்தியை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
இந்த தனித்துவமான முயற்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி;க்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.