மும்மொழிக் கொள்கையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் எண்ணத்திற்கு எதிராக திமுக அரசு செயல்படக்கூடாது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம பேசிய அவர், மும்மொழிக் கொள்கையில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.
மாணவர்கள், பெற்றோர்களின் எண்ணத்திற்கு எதிராக மாநில அரசு செயல்படக்கூடாது என்றும் அவர் கூறினார். மொழியை திணிக்க வேண்டும் என யாரும் நினைக்கவில்லை என்றும் வாசன் தெரிவித்தார்.